கென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கென்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 10 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்ய நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், டெல்லியில் வேலைபார்த்து வருகிறார். தெற்கு டெல்லி பகுதியில் உள்ள சத்தர்புரா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார்.