குர்கான் அருகே கணவர் மற்றும் மைத்துனரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக்கொண்டு இளம் பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு அந்த பெண் தனது கணவர் மற்றும் மைத்துனருடன் திரும்பும்போது இந்த கொடூர செயல் அரங்கேறியுள்ளது. மைத்துனரின் காரில், கணவர் மற்றும் மைத்துனருடன் 22 வயதுள்ள அந்த பெண், செக்டார் 56 பகுதியிலுள்ள, பிசினஸ் பார்க் டவர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கணவர் காரை நிறுத்தி கீழே இறங்கியுள்ளார்.
இயற்கை உபாதையை கழிப்பதற்காக அந்த இளம்பெண்ணின் கணவர் கீழே இறங்கி சென்றுள்ளார். அப்போது 2 கார்களில் நால்வர் அங்கே வந்துள்ளனர். ஏன் இங்கே காரை நிறுத்தி உள்ளீர்கள் என அதிகார தோரணையில் அவர்கள் கேட்டுள்ளனர். இதற்கு அந்த பெண்ணின் மைத்துனரும், கணவரும் பதில் சொல்லிக்கொண்டிருந்தபோதே, நால்வரின் பார்வையும், காருக்குள் இருந்த அந்த இளம்பெண் மீது பதிந்துள்ளது.
தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்ட அந்த நால்வரும் திடீரென பாய்ந்து சென்று, அந்த பெண்ணை காருக்கு வெளியே இழுத்து கொண்டுவந்தனர். மூன்று பேர் துப்பாக்கி முனையில், கணவரையும், மைத்துனரையும் பிடித்துக்கொண்டனர். மற்றொருவர் அந்த பெண்ணை அவர்கள் கண் எதிரில் பலாத்காரம் செய்தார். இப்படி மாறி, மாறி அந்த பெண்ணை பலாத்காரம் செய்த பிறகு நால்வரும் காரில் தப்பினர்.
A woman was allegedly sexually assaulted while her husband and brother-in-law were being held at gun-point at Sector-56 in Gurgaon, following which four persons were arrested, the police said.