ஜகான்கிரிபுரியில் 20 வயது பெண்ணை பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திய சிறுவர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு கொஞ்சம் பாதுகாப்பில்லாத நகரங்களின் பட்டியலில் டாப்பில் உள்ளது டெல்லி. டெல்லி ஷாலிமார் பாக் பகுதியில் கடந்த வாரம் தான் டீனேஜ் பெண் ஒருவர் மூன்று பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லி ஜஹாங்கிரிபுரி பகுதியில் உள்ள குப்பை கிடங்கு வழியாக 20 வயது பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை இரவு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 5 பேர் அந்த பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
சத்தம்போட்டோலோ அல்லது நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினாலோ போலீஸ்க்கு போனாலோ கொன்றுவிடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த அந்த பெண் சத்தம்போடாமல் இருந்துள்ளார்.