ரஷ்ய நாட்டு சுற்றுலா பெண் பலாத்காரம் செய்யப்பட்டு சுய நினைவின்றி
மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவரை மாவட்ட நீதிபதி நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
ரஷ்ய நாட்டை சேர்ந்த ஹலினா இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்கைள சுற்றி பார்க்க கடந்த 12ம் தேதி மும்பையில் இருந்து திருவண்ணாமலை வந்தார். கிரிவலப் பாதையில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் வீடு ஒன்றை வாடைகைக்கு எடுத்து தங்கினார். அருணாசலஸ்வரர் கோவில், ரமணாஸ்ரமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி அறையினுள் சென்றவர் மீண்டும் வெளியே வர வில்லை. இதில் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது அலங்கோலமான நிலையிலும் மயங்கிய நிலையிலும் ஹலினா கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஹலினாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு அவர் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனை செய்த போது அங்கு போதை மாத்திரைகள் இருந்துள்ளது. அதனை போலீசார் கைப்பற்றினர். மேலும் ஹலினா கற்பழிக்கப்பட்டது குறித்து அவரை சுற்றிப்பார்க்க காரில் அழைத்து சென்ற கார் டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் மூவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஹலினா குறித்து ரஷ்ய தூதரகத்திற்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹலினாவை மாவட்ட நீதிபதி மகிழேந்தி சென்று விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுல்லா பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளதாவும் ஹலினா தற்போது சுயநினைவின்றி இருப்பதால் அவருக்கு சுய நினைவு திரும்பிய உடன் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டாரா என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.