எம்எல்ஏ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸில் புகார் கூறிய பெண் ஒருவர், இதற்கு தனது கணவரே எம்எல்ஏவுக்கு உதவியதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்காக எத்தனை சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் உள்ளது.
ஒவ்வொரு சம்பவத்தின் போதும் கண்டனம் தெரிவிப்பதும் சூட்டோடு சூடாக போராட்டம் நடத்துவதுமே மட்டுமே வாடிக்கையாக உள்ளது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடராத வகையில் நிரந்தர தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.