காவல்நிலைய எதிரில் கொலை..வேலூரில் பரபரப்பு-வீடியோ

Oneindia Tamil 2018-07-13

Views 1.7K

தனது உயிருக்கு பாதுகாப்பில்லை என ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்த பெண் காவல்நிலைய எதிரில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் செங்காடு பகுதியை சேர்ந்த சுகுணா என்பவர் தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு பாதுகாப்பு தர கோரியும் சுரேந்திரன் என்பவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் போலீஸ் ஸ்டேசன் வாசலிலேயே சுகுணா வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்திய போது சுகுணாவிற்கும் சுரேந்திரனுக்கும் கள்ள தொடர்பு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. சமீப காலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சுகுணா சுரேந்திரன் மீது ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார் அப்போது தான் சுகுணா காவல் நிலையம் எதிரே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

des: The incident happened in the police station of the Rani Pettai police station.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS