சக மாணவர்களுடன் பேசி கொண்டிருந்த மாணவனை ஆரியர் பிரம்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் திட்டியதால் 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் 10ம் வகுப்பு மாணவன் ஆசிரியர் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டத்தில் அடுக்கடுக்காக ஆசிரியர்கள் மாணவர்களை திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் மாணவர்களை ஆசிரியர்கள் தாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று சாம்பமூர்த்தி என்பவரது மகன் நிதிஷ்குமார் அரசுபள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறான். வகுப்பில் ஆசிரியர் இல்லாததால் நிதிஷ்குமார் சகமாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளான். அப்போது பக்கத்து வகுப்பறையில் இருந்த ஆசிரியர் நிதிஷ்குமாரை பிரம்பால் தாக்கியுள்ளார். இதில் நிதிஷிற்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் திட்டுதலும் அடித்தலும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு பள்ளி கல்வித்துறை சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Des : The incident that struck a student who was talking to fellow students was strangled by the Aryan brigade.