வலிப்பு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் காலதாமதம் செய்ததாக ஆம்பூர் அரசு மருத்துவமனையின் கண்ணாடிகளை உறவினர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு…..
வேலூர்மாவட்டம் ஆம்பூர் தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பர்வேஸ் அகமது கூலித்தொழிலாளியான அவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததை பார்த்து பதறிய அவரின் உறவினர்களை பர்வேஸ் அகமதுவை உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பர்வேஸ் அகமதுவின் உறவினர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கண்ணாடிகளை அடித்துநொறுக்கினார்கள். இதுகுறித்து பணியிலிருந்த மருத்துவர் அருணா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார் அஜீஸ் மற்றும் அகில் அஹமது ஆகிய இருவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்
ஆம்பூர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கடந்த சில நாட்களுக்கு முன்னர் விபத்தில் ஒன்றில் இளைஞருக்கு காலதாமதமாக சிகிச்சை அளித்ததாக கூறி அடித்து நொறுக்கப்பட்ட சில நாட்களிலேயே மீண்டும் இரண்டாவது முறையாக அரசு மருத்துவமனை அடித்துநொறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது