ஆயிரம் ருபாய் பெறாத செல்போனுக்காக சிறுவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆம்பூரை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் கிஷோர் .அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான் பள்ளி முடிந்து தினமும் மாலை அருகில் உள்ள மைதானத்தில் கபடி விளையாடுபவர்களை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளான் . இந்நிலையில் நேற்று கபடி விளையாட்டை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த கிஷாரிடம் நவீன் என்ற கல்லூரி மாணவன் தனது செல்போனை வைத்துகொள்ளும்படி கூறியுள்ளார் . ஆனால் சிறுவன் கிஷோர் மறதியில் வீட்டுக்கு செல்போனை கொண்டு சென்றுவிட்டான் . பின்னர் தனது வீட்டில் தந்தையிடம் செல்போனை கொண்டு வந்து விட்டதாகவும் அதனை திருப்பி தந்துவிட்டு வருவாககூறி சென்ற சிறுவன் நெடு நேரம் ஆகியும் வரவில்லை இதனால் சந்தேகம் அடைந்த கிஷோரின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர் . போலீசார் நடத்திய விசாரணையில் நவீன் கொடுத்த தகவலை வைத்து காவல்துறை அவரின் செல்போன் ஐ.எம்.இ.ஐ நம்பரை கொண்டு ஆய்வு மேற்கொண்ட போது அந்த செல்போனை வேறு ஒரு நபர் பயன்படுத்தியதை அறிந்து அவனை பிடித்து விசாரணை செய்தனர்அப்போது ஆம்பூர் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி விக்னேஷ் தனக்கு விற்பனை செய்ததாக கூறினார் இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவனை பிடித்து விசாரணை செய்ததில் குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து கிணற்றில் வீசியதை ஒப்புகொண்டார் இதுகுறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர் ஆயிரம் ருபாய் மதிப்புள்ள செல்போனுக்காக மாணவனை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .