தொடரும் தற்காலை… வேலூரில் அதிர்ச்சி சம்பவம்…வீடியோ

Oneindia Tamil 2018-01-09

Views 571


ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இன்று மீண்டும் 10ம் வகுப்பு மாணவன் ஆரிசியை திட்டியதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே மேலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. அதே பகுதியில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலையில் சகமாணவரை சுந்தரமூர்த்தி கீழே தள்ளியுள்ளார். இது குறித்து அறிந்த ஆசிரியைகள் சங்கரி மற்றும் கவிதா ஆகியோர் சுந்தரமூர்த்தியை மிரட்டியதுடன் பெற்றோர்களை அழைத்து வரும் படி கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து சுந்தர மூர்த்தியின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதுடன் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் திட்டியதால் மாணவ மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை தடுக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS