தேசிய நெடுஞ்சாலையில் தங்கசங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையின் புறநகர் பகுதிகளான வண்டலூர் மீஞ்சூர் மதுரவாயல் தாம்பரம் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் தனியாக நடந்து செல்பவர்களிடம் தங்க சங்கிலியை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் நடைபெற்றது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தேசிய நெடுஞ்சாலைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது தேசிய நெடுஞ்சாலைகளில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது நெடுஞ்சாலைகளில் செல்பவர்களிடம் அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 சவரன் நகைகள் செல்போன் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து கொள்ளையர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
des: Police arrested and arrested 4 robbers on the national highway.