சென்னை விருகம்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்க உதவிய இரு நேபாளிகளை போலீஸார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கத்தில் ஆற்காடு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அப்போது வங்கியின் சுவரில் துளையிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வங்கியில் இருந்த 2 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 35 லட்சமாகும். இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். கொள்ளையர்கள் கேஸ் சிலிண்டர் கட்டர் வைத்து வெல்டிங் செய்துவிட்டு முதல் தளத்திலிருந்து லாக்கர் அறைகள் இருக்கும் இடத்துக்கு சென்று லாக்கரை கொள்ளையடித்தது தெரியவந்தது. இந்நிலையில் கொள்ளையடிக்க சிலிண்டர் கொடுத்து உதவிய இருவரை போலீஸார் இன்று கைது செய்தனர். அவர்கள் ஹிலாராம், ஹர்பகதூர் என்றும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. கொள்ளையர்கள் குறித்து இவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
Police arrest 2 Nepalese in connection with Chennai Virugambakkam IOB bank robbery.