கேரளாவில் திருநங்கைகளுக்கு கல்லூரி மற்றும் பல்கலை.களில் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை திருநங்கைகள் சமூகத்தினர் மனமார வரவேற்றுள்ளனர். பல காலங்கள் ஆனாலும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதே அவமானமாக அவர்களுக்கு உணர்த்தப்பட்டது. கேலியும், கிண்டலும் உடைகள் தாண்டி அவர்களை கூசச் செய்தது.
பெண்ணாக வாழ விரும்பியும் அதனை வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல், ஆணின் உடைக்குள் தஞ்சமடைந்தே கிடப்பது அவர்களின் மனங்களை நொறுக்கி கொண்டிருக்கிறது. அதனால் தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு சமூக சிக்கல்களிலிருந்து அவிழ்த்து விடுபட பல்வேறு காலமாக மிகவும் போராடி வருகின்றனர்.
Kerala announces quota for transgender students in colleges and universities