பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், 'காலா' படத்தின் சண்டைக் காட்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி, வேகமாகப் பரவிவருகிறது.
அந்த வீடியோவில் ரஜினி, வில்லன் ஒருவரைத் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதனால், படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.