காலா டீசர் தள்ளிவைப்பிற்கும் காலா டீசர் லீக்கிற்கும் என்ன சம்பந்தம்?- வீடியோ

Filmibeat Tamil 2018-03-01

Views 8.2K

ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'காலா' படத்தின் டீசர் மார்ச் மாதம் 1-ம் தேதி (இன்று) வெளியாக இருந்தது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'காலா'. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. 'காலா' வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை காஞ்சிபுரம் சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரின் மரணத்துக்கு இறுதி மரியாதை அளிக்கும் விதமாக 'காலா' படத்தின் டீசரை மார்ச் 2-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். இந்த தள்ளிவைப்பு அறிவிப்பில் டீசர் ரிலீஸ் மார்ச் 2 என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது நேரம் எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, ரசிகர்களை அதிகமாகக் காக்க வைக்காமல் நாளை காலையே வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Dhanush has announced that 'Kaala' teaser release will be postponed to March 2, as the final honor for Kanji Sankaracharya. Dhanush has also apologized to fans who were eagerly awaiting the teaser.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS