காலா பட நடிகை அஞ்சலி பட்டீல் பேட்டி #kaala

Filmibeat Tamil 2018-04-07

Views 1.9K

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தில் நிறைய அரசியல் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்தப் படத்தில் நடித்துள்ள அஞ்சலி பட்டீல் தெரிவித்துள்ளார். காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஹுயூமா குரேஷி நடித்துள்ளார். ஆனால் ட்ரைலரில் ரஜினியின் மனைவியாக ஈஸ்வரி ராவ் வருகிறார். இந்தப் படத்தில் அஞ்சலி பட்டீலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நானா படேகர் வில்லனாக வருகிறார். இந்தப் படம் சென்சார் முடிந்து யு ஏ சான்றுடன் வரும் ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படம் குறித்து அஞ்சலி பட்டீல் கூறுகையில், "காலாவில் தமிழ் பேசும் மராத்திப் பெண்ணாக நடித்திருக்கிறேன். படத்தில் வலுவான பாத்திரங்களில் ஒன்று நான் நடித்துள்ள பாத்திரம். ஒரு முக்கியமான அரசியல் செய்தியைச் சொல்லும் படமாக காலா அமைந்துள்ளது," என்றார்.


Anjali Patil who plays a Tamil speaking Marathi girl in Superstar Rajinikanth’s Kaala revealed that the film will have a strong political message.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS