மோகன்ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து கடந்த டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'வேலைக்காரன்'. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, பிரகாஷ்ராஜ், ஃபகத் பாசில், ரோபோ சங்கர், ஸ்நேகா, சதீஷ், விஜய் வசந்த், தம்பி ராமையா, ரோஹினி உட்பட என பலர் நடித்திருந்தனர். 'வேலைக்காரன்' படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். செம மாஸ் ஓப்பனிங்கோடு வெளியான 'வேலைக்காரன்' படம் வசூல் குவித்து வருகிறது. இந்தப் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி விஜய் டி.வி-யில் நடைபெற்றது.
விஜய் டி.வி-யில் நடைபெற்ற 'வேலைக்காரன்' படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், சதீஷ், ரோபோ சங்கர், தம்பி ராமையா, விஜய் வசந்த், ரோஹிணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விஜய் டி.வி-யின் கலக்கப்போவது யாரு ஸ்பெஷல் நிகழ்ச்சியாக 'வேலைக்காரன்' ப்ரொமோஷன் நடைபெற்றது. வழக்கமாக 'கலக்கப்போவது யாரு' டீமை போனில் லந்து செய்யும் தீனா இந்த நிகழ்ச்சியையும் விடவில்லை.
சிவகார்த்திகேயன் உட்பட எல்லோரையும் செமயாக கலாய்த்தார். விஜய் டி.வி-யையும் கிடைக்கிற கேப்பில் எல்லாம் கலாய்த்து சிரிக்க வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 'வேலைக்காரன்' பட ஹீரோயின் நயன்தாரா கலந்துகொள்ளவில்லை.
ரோஹிணியை நயன்தாரா என அழைத்து கலவரப்படுத்தினார் தீனா. அப்புறம், "விக்னேஷ் சிவன் வராததால் நயந்தாரா வரலையா" எனக் கேட்டு கலாய்த்தார். நடிகை ரோஹினி என்ன சொல்வது எனத் தெரியாமல் தர்மசங்கடமான சூழ்நிலையில் அமர்ந்திருந்தார்.
Sivakarthikeyan starred 'Velaikkaran' released on December 22. Sivakarthikeyan, Sathish, Robo Shankar, Thambi Ramayya, Vijay Vasanth, Rohini were present at the velaikkaran promotion show of Vijay TV. Vijay TV Dheena trolls everyone including Sivakarthikeyan and Nayanthara in this show.