தனது மகளுக்கு சிக்கன், பர்கர், பீட்சா ஆகிய உணவுகளை வாங்கிக் கொடுத்ததே இல்லை என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் பார்த்த பிறகு சூப்பர் மார்க்கெட் சென்றாலே கொஞ்சம் பகீர் என்கிறது. பிள்ளைகள் ஆசையாக கேட்கும் பொருட்களை பார்க்கும்போது விஷத்தை பார்ப்பது போன்ற பயம் வருகிறது.
அப்போது சிவகார்த்தியேகன் பேசிய வசனம் எல்லாம் நினைவுக்கு வருகிறது.
சிவகாரத்திகேயன் படத்திற்காக வெறும் வாய்ச்சவுடால் விடும் ஆள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார். அவர் தனது மகள் ஆராத்யாவுக்கு சிக்கன், பர்கர், பீட்சா, கூல்ட்ரிங்க்ஸ் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்ததே இல்லையாம். இதை அவரே தெரிவித்துள்ளார்.
விவசாயத்திற்கு ஆதரவாக நடிகர் ஆரி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் எதிர்காலத்தில் விவசாயியாக ஆக வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
Sivakarthikeyan said that he has not given pizza, burger, cool drinks to his four-year-old daughter Aradhya. He doesn't want to act in advertisements asking others to buy things that he won't give his daughter.