விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்து வரும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் டீஸர் வெளியாகி தெறிக்கவிட்டுள்ளது. ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி 8 வித்தியாசமான கெட்டப்புகளில் வரும் படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இந்த படத்தில் கவுதம் கார்த்திக், காயத்ரி உள்ளிட்டோர் உள்ளனர். நடிகர் சிரஞ்சீவி வீட்டு பெண் நிஹாரிகா இந்த படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. அதில் ராமன் நல்லவனா, ராவணன் நல்லவனா என்று கேள்வி கேட்கிறார் விஜய் சேதுபதி. இந்த கதையில் ராமனும் நான் தான், ராவணனும் நான் தான் என்று விஜய் சேதுபதி மிரட்டலாக சொல்கிறார். அவரின் கெட்டப்புகள், கெத்து ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. எந்த படம் ரிலீஸானாலும் பிரச்சனை செய்ய ஒரு கோஷ்டி கிளம்பிக் கொண்டிருக்கும்போது துணிந்து ராமாயணனம் பற்றி பேசுகிறார் விஜய் சேதுபதி. படக்குழுவின் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள். படத்தில் ஹீரோவும், வில்லனும் விஜய் சேதுபதி என்பது போன்று தெரிகிறது. டீஸரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தை உடனே பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு மிரட்டலாக உள்ளது.
Vijay Sethupathi's Oru Nalla Naal Paathu Solren teaser has been released and impressed the fans very much. Vijay Sethupathi is initiating the debate whether Ram or Ravan is a bad guy. Vijay Sethupathi is appearing in eight different looks in the movie.