குஜராத்தில் பாஜக-வை தெறிக்க விடும் காங்கிரஸ்- வீடியோ

Oneindia Tamil 2017-12-18

Views 44.5K

குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவை ஓவர்டேக் செய்து காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. குஜராத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பாஜகதான் ஆட்சியில் உள்ளது.
இந்நிலையில் மோடி பிரதமரான பின்பு அம்மாநிலம் முதல் முறையாக தேர்தலை சந்தித்துள்ளது. இதற்கான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. காலையில் நடைபெற்ற தபால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களில் டிரண்ட் மாறியது. தற்போது காங்கிரஸ் மேலே வந்து விட்டது. இதனால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலவரம் இப்படியே தொடர்ந்தால் கண்டிப்பாக பாஜக கலவரமாகி விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

தபாக் வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே பெரும்பாலான தேசிய ஊடகங்கள் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக தெரிவித்து வருகின்றன. இதே போன்று சில ஊடங்கள் பாஜக அதிக வித்தியாசத்தில் காங்கிரஸை விட முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கின்றன. இந்நிலையில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து வெளிவரும் அகமதாபாத் மிரர் இணையதள செய்தி நிறுவனம் காலை 8.20 மணி நிலவரப்படி பாஜக 24 டங்களிலும், காங்கிரஸ் 24 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் இரண்டு கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுவதாக கூறியுள்ளது.


Early leads suggest Congress and BJP are neck and neck, in the beginning of vote counting BJP and Congress both were lead in 24 seats it further says.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS