துபாயில் நடைபெறும் இயக்குநர் ஷங்கரின் 2.0 பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் கலந்து கொள்ளவுள்ள நிலையில் சிவாஜி மணி மண்டபம் போல் காரசாரமாக அமையுமா என்று இரு தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நடிகர் கமலும், ரஜினியும் அரசியல் கட்சிகளைத் தொடங்கவுள்ளனர். கடந்த சில தினங்களாக நடிகர் கமல் ஹாசன் தமிழக அரசை தாக்கி பேசி வருகிறார். அவர் வரும் நவம்பர் 7-ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கவுள்ளார். அதேபோல் ரஜினியும் வரும் ஜனவரியில் அரசியல் மாநாடு நடத்த போவதாக தகவல்கள் வருகின்றன
.இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சூசகமாக தெரிவித்த நாள் முதல் ரஜினியை கமல்ஹாசன் தொடர்ந்து சீண்டி வந்தார். கமல் தனது டுவிட்டரில் முந்தி செல்லாதே கூட நட என்று தெரிவித்திருந்தார்.
Today Rajinikanth 2.0 audio release function in Dubai. Kamalhassan is participating.Both of their fans expecting any hot debate like Sivaji Mani mandapam' function.