கடந்த 20 ஆண்டுக்கு மேலாக போதிய நீர் வரத்து இன்றி வருடத்தில் சில மாதங்கள் மட்டும் நீர் மட்டம் இருந்த உப்பாறு அணை, கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டிய தை அடுத்து உபரி நீர் திறக்கப்பட்டது.இதனை தொடர்ந்து மூன்று மாதங்கள் கடந்து இன்று பாசனத்துக்கு இடது வலது கரை வாய்க்கால் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.