உளுந்தூர்பேட்டை அருகே புதிதாக திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் மையத்தை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் திறந்து வைத்தார் .மேலும் விவசாயிகள் கொண்டு வரும் நெற்பயிரை தங்குதடையின்றி அரசு அறிவித்த ஆதார விலையின் அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.