6.35 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் புதிய மாருதி சுஸுகி பலேனோ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.49 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஸ்மார்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய பெட்ரோல் இன்ஜினை புதிய மாருதி சுஸுகி பலேனோ பெற்றுள்ளது. அத்துடன் இதன் டிசைன் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்ற பல்வேறு வசதிகளை புதிய மாருதி சுஸுகி பலேனோ பெற்றுள்ளது. இந்த கார் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.
#NewBaleno #MarutiSuzukiBaleno #2022MarutiSuzukiBaleno #MarutiBalenoFeatures