ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு திருவிடைமருதூர் அருகே பிரசித்தி பெற்ற மணலூர் ஏழுலோகநா தலயகி அம்மனுக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது.
ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பிரசித்தி பெற்ற ஏழுலோக நாயகி அம்மன் கோயிலில் விசேஷ பூஜைகள் நடந்தது. முன்னதாக கோயிலின் மூலவரான ஏழுலோக நாயகி அம்மனுக்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன்கள் செலுத்தி வழிபாடு செய்தனர்.