கோவை வ.உ.சி மைதானத்தில் காவல் துறையின் சார்பில் சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொடியேற்றும் நிகழ்வு மற்றும் காவல்துறை அணிவகுப்புகள் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை மறுநாள் சுதந்திர தின விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஐ.ஏ.எஸ்., வ.உ.சி மைதானத்தில் தேசிய கொடியேற்றுகிறார். இதற்காக இன்று இம்மைதானத்தில் காவல் துறை சார்பாக அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை அணிவகுப்பில் நூற்றுக்கு மேற்பட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.