விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்
நாட்டின் 75 வது வைர விழா சுதந்திர தினம் நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அரசின் வழிகாட்டுதலோடு தகுந்த முன்னெச்சரிக்கையோடு விருதுநகர் மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டது. விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சுதந்திரத்தை மீண்டும் பறைசாட்டும் வண்ணம் வண்ண பலூன்களையும்,வெண் புறாக்களையும் ஆட்சியர் பறக்க விட்டார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட 21 துறைகளை சேர்ந்த 463 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் களை வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக தேசபக்தி மிகுந்த நடனம்,நாடகம்,குழு பாடல் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் உள்ளிட்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.