கரூர் அடுத்த தொழிற்பேட்டை ஆசிரியர் காலனியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அறச்சாலை பத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு காய்கனி அலங்காரம்
கரூர் அடுத்த தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஆசிரியர் காலனியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அறச்சாலை பத்ரகாளியம்மன் ஆலயம் சுமார் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும்., இந்நிலையில், ஆடி மாத கடைசி வெள்ளியான இன்று அம்மனுக்கு விஷேச அலங்காரங்கள் காய்கனி அலங்காரங்கள் செய்யப்பட்டு, கத்திரிக்காய், புடலங்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, எழுமிச்சைப்பழம், பீக்கங்காய், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்களாலும், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழை உள்ளிட்ட கனிவகைகளாலும் அம்மனுக்கு சாத்தப்பட்டு விஷேச தீபாராதனை காட்டப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கரூர் ச்ஷ்டிக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் கொரோனா பெருந்தோற்று இந்த உலகத்தை விட்டு நீங்க வேண்டியும், மக்கள் நோய் நொடியில்லாமல், அனைவரும் நலமுடன் வாழ வேண்டி விஷேச பூஜைகள் நடத்தப்பட்டது. ஆலயத்தில் அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.