சென்னை திருவொற்றியூரில், பொதுமக்களுக்கு பா.ஜ.க சார்பில் நிலவேம்புக் கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, '' ‘மெர்சல்' படத்தில் இருந்து ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்காவிட்டால், வழக்குத் தொடரப்படும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தவறான தகவல்களைப் பரப்பிவருகிறார்'' என்று தெரிவித்தார்.