கலெக்டர் அலுவலகத்திலும் ஊர்மக்கள் சார்பில் மனுக் கொடுத்தோம். யாருமே இதுவரை செய்துகொடுக்க முன்வரவில்லை. இதுமாதிரி மனுக்கொடுத்து இருபது வருஷம் ஓடிப்போச்சு. மழை பெய்தால், வெயில் அடித்தால், இந்த இடத்தில் நின்றுதான் பஸ் ஏறுவோம். மழைக் காலங்களில் குடையைப் பிடித்துக்கொண்டுதான் நிற்கவேண்டும். வெயில் காலத்தில் பக்கத்தில் இருக்கும் கடையில் நிற்போம். பஸ் வருவது தெரியாம பஸ்ஸையும் தவற விட்டிருக்கிறோம்.