பிக்பாஸ் வீட்டிலேயே இதற்கான அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. குறிப்பாக, ‘தாம்தான் வெளியேற்றப்படுவோம்’ என்று எதிர்பார்த்திருந்த பாலாஜியின் முகத்தில் திகைப்பு வெளிப்படையாக தெரிந்தது. மக்கள் அளிக்கும் வாக்குகள் மதிக்கப்படுகிறதா அல்லது பிக்பாஸ் குழு தங்களின் வணிக உத்திகளுக்கேற்ப முன்னமே தீர்மானித்தைத்தான் ‘மக்களின் தீர்ப்பு’ என்கிற பாவனையில் வெளியிடுகிறதா என்கிற வழக்கமான சந்தேகம் இம்முறை அழுத்தமாக உருவாகியது.
Is biggboss cheating the audience ? people are thinking biggboss eviction are not fair.