போலந்து நாட்டைச் சேர்ந்தவர் Piotr Kwasny. இவரின் மனைவி அக்னீஸ்கா. கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்தனர். இரு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை. ஃபிலிப் எனப் பெயரிட்டு செல்லமாக வளர்த்தனர். சிறிய குடும்பம். வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை அக்னீஸ்காவைப் புற்றுநோய் தாக்கியது. க்வான்சியால் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை. உயிருக்குயிரான மனைவியை புற்று நோய் அவரிடம் இருந்து பறித்தது. போலந்து நாட்டில் உள்ள Wadowice அக்னீஸ்காவின் சொந்த ஊர். அந்தச் சிறிய கிராமத்தில் மனைவியின் உடலைப் புதைத்தார் க்வான்ஸி.