வேளாண் சட்டத்தை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் நூதன போராட்டம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி
தமிழகம் முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்கள், பொது நல அமைப்புகள் சாலை மறியல், முற்றுகை போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்
சங்கிலியால் தங்களை பிணைத்துக் கொண்டும், கழுத்தில் கயிறு மற்றும் மண்டை ஓட்டை மாட்டிக் கொண்டும் அரை நிர்வாணத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொடர் போராட்டம் காரணமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
பேட்டி : அய்யாக்கண்ணு,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர்.