தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சாரல் மழை..பொதுமக்கள் மகிழ்ச்சி- வீடியோ

Oneindia Tamil 2019-06-21

Views 1

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் ஒரு சில இடங்களில் வெயில் உடன் சேர்ந்து அனல் காற்று வீசி வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாகவும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சோத்துப்பாறை, கும்பக்கரை, முருகமலை, எ.புதுப்பட்டி, வடுகபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சாரல்மழை பெய்தது. காலை முதல் நேரங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில் மலை நேரத்தில் பெய்த சாரல் மழையால் பூமியின் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

des : The Theni district is delighted by the torrential rains in Periyakulam and its surrounding area.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS