திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா சத்திரப்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விவேக்(19). இவர் வத்தலக்குண்டு அருகே உள்ள பிவிபி.கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் பட்டிவீரன்பட்டியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று படித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா சென்றுள்ளார். கும்பக்கரை அருவியில் உள்ள யானை கெஜத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது தண்ணீரில் முழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரியகுளம் அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டு அங்க சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். விடுமுறை தினம் என்பதால் கும்பக்கரை அருவியில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இருந்த நிலையில் கல்லூரி மாணவனுக்கு ஏற்பட்ட நிலை அப்பகுதியில் சோகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
DES : The college student went to Kumbakkarai Falls near Periyakulam in Theni district.