தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 60-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் துவங்கியது. இதில் தமிழகம் உட்பட புதுடெல்லி, பெங்ளுர், தெலுங்கானா, வாரணாசி, லோனோவாலா, கோரக்பூர் (உபி) கேரளாமின்வாரியம் (திருவணந்தபுரம்) உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 24 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றது. இன்று துவங்கிய போட்டியானது 20ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெருகின்றது. போட்டிகள் காலை மாலை மற்றும் இரவில் மின்னொலியில் நடைபெருகின்றது. இன்று போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பெரியகுளம், செங்கோட்டை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்த அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றது. இன்று முதலாவது நாக்டகவுட் போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூபிலிவிளையாட்டுகழகம் அணியும், செங்கோட்டை கூடைபந்தாட்ட கழக அணியும் மோதியல் செங்கோட்டை அணி 65க்கு 47 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இரண்டாவதாக நடைபெற்றபோட்டியில் தேனி வடுகபட்டி கூடை பந்தாட்ட கழகம் அணியும் திண்டுக்கல் கூடைப்பந்தாட்ட கழக அணியும் மோதியதில் திண்டுக்கல் கூடைப்பந்தாட்டக் கழக அணி 62க்கு 43 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. மூன்றாவதாக் நடைபெற்ற போட்டியில் தஞ்சாவூர் கூடப்பந்தாட்ட கழக அணியும், கரூர் டெக்ஸ் சிட்டி அணியும் மோதியதில் கரூர் டெக்ஸ் சிட்டி அணி 79க்கு 42 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நான்காவது நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி டி.பி.ஏ அணியும், சேலம் கூடைப்பந்தாட்ட அணியும் மோதியதில் சேலம் அணி 54க்கும் 30 என்ற புள்ளிகள் அடிப்ப்டையில் சேலம் அணி வெற்றி பெற்றது. போட்டிகள் அனைத்தும் நாக்கவுட் முறையிலும் பின்னர் லீக் சுற்று முறையில் போட்டிகள் நடைபெருகின்றது. இருதிபோட்டியில் வெற்றி பெரும் அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்கபரிசுகள் வழங்கபட உள்ளது.
DES :The 60th Annual Basketball Tournament in Theni District in Periyakulam There are 24 teams in India, including Tamil Nadu