தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அமரர் பி.டி. சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 60-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இதில் ஐந்தாம் நாளான இன்று நாக்கவு சுற்றுகளில் 24 அணிகள் பங்கேற்றதில் பாங்க் ஆப் பரோடா பெங்கள+ர் அணி, இந்திய தரைப்படை ரெட் புதுடெல்லி அணி, இந்தியன் வங்கி சென்னை அணி ஏ.ஒ.சி செக்ந்திராபாத் ஆகிய 4 அணிகள் லீக் சுற்று போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று நடை பெற்ற முதலாவதாக நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் பாங்க் ஆப் பரோடா பெங்கள+ர் அணியும் இந்திய தரைப்படை ரெட் புதுடெல்லி அணியும் மோதியதில் பாங்க் ஆப் பரோடா பெங்கள+ர் அணி 78க்கு 73 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இரண்டாவதாக இந்தியன் வங்கி சென்னை அணிக்கும் ஏ.ஒ.சி செக்ந்திராபாத் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் இந்தியன் வங்கி சென்னை அணி 93க்கு 71 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இன்றும் நாளையும் நடைபெற்றும் லீக் சுற்று போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்று முதல் மற்றும் இரண்டு மூன்று ஆகயி இடங்களை பிடிக்கு அணிகள் நாளை மறுநாள் நடக்க உள்ள இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளது.
des : The league tournament started today at the 60th Annual Indian Basketball Tournament in Periyakulam.