கணவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மணைவி மற்றும் கள்ளக் காதலன் கைது சிறையில் அடைத்துள்ளனர்
தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி கொடைக்கானல் மலைச் சாலையில்கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் 30 வயதுமதிக்கத்தக்க ஆண் பிணம் மீட்பு குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மங்களூரைச் சேர்ந்தமுகமதுசமீர் என்பது தெரிய வந்ததை தொடர்ந்து கொலையான முகமதுசமீர் உடலைசெப்டம்பர் மாதம் 24ஆம் தேதி அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கொலையாளிகளை தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன்உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சுகுமார்தலைமையில் தேடி வந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் மங்களூருவில்கொலையான முகமதுசமீரின் மனைவி ஃபர்தோஷ் மற்றும் வாடைகை கார் ஓட்டுனர்முகமதுயாசிப் ஆகியோரை நேற்று மங்குளுருவில் கைது செய்து தேனி மாவட்டம்தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் தனி இடத்தில் வைத்து விசாரனை மேற்கொண்டுவந்ததில் தாங்கள் தான் தூக்கமாத்திரை கொடுத்து கொடைக்காணல் சாலையில் கழுத்தைஅறுத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதின் பேரில் தேவதானப்பட்டிகாவல்துறையிணர் இருவரையும் பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபின்பு மதுரை மத்திய சிறையில் அடைத்தணர்.