சென்னை திருவேற்காடு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரபட்ட பெண் தீ குளித்து தற்கொலை முயற்சி செய்து கொள்ள முயன்ற பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ரேணுகா. இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசிப்பவர் அமிர்தவல்லி. ரேணுகாவிற்கும அமிர்தவல்லிக்கும் வீட்டில் இரும்பு கேட் வைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அமிர்தவல்லி திருவேற்காடு காவல் நிலையத்தில் ரேணுகா மீது புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ரேணுகாவை விசாரனைக்காக காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவல் துறையினர் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக கூறபடுகிறது. இதனால் மணமுடைந்த ரேணுகா காவல் நிலையம் முன்பு யாரும் எதிர்பாராத விதமாக தன்னுடைய உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். ரேணிகாவின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த காவலர்கள் தீயை அணைத்து ரேணுகாவை அரசு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேணுகா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.