காவல்துறை அதிகாரிகள் உயிர் பறிபோவதை தவிர்க்க இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா ?- வீடியோ

Oneindia Tamil 2017-12-15

Views 1

ராஜஸ்தானில் கொள்ளையர்களுக்கும் போலீசாருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உயிரிழந்துள்ள நிலையில், இதுபோன்ற நிலையை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. சென்னை கொளத்தூரில் உள்ள முகேஷ்குமார் என்பவரின் நகைக்கடையில் கடந்த நவம்பரில் மேல்தளத்தில் துளையிட்டு கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை நடந்த இடத்திலிருந்து கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கொள்ளையர்கள்குறித்த தகவல் கிடைத்தது.

இதையடுத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநிலக் கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி. கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் ராஜஸ்தான் சென்றனர்.
ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டம், ஜெய்த்ரான் காவல் நிலையத்துக்குட்பட்ட, ராம்புர்கலான் கிராமத்தில் கொள்ளையர்கள் பதுங்கியிருந்தனர். இதையடுத்து அதிகாலை 2 மணியளவில் தமிழக தனிப்படை போலீசார் கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர். அப்போது கொள்ளையன் சுட்டதில் பெரியபாண்டி உயிரிழந்தார். முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

How Chennai police inspector Periya Pandi gunned by burglars in Rajasthan.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS