திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்பட உள்ள நினைவேந்தல் கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க மாட்டார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இயற்கை எய்தினார். இந்த நிலையில் அவருக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட உள்ளது.