கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலையில் 80 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, 11 மணி அளவில் ஒரு லட்சம் கனஅடியாக உயர்ந்தது. இந்நிலையில் நண்பகல் ஒரு மணி அளவில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. தற்போது, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவான 120 எட்டியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஒரே மாதத்தில் மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியுள்ளது. மேலும் 84 ஆண்டுகால மேட்டூர் அணை வரலாற்றில் 40வது முறையாக நிரம்பி வழிகிறது. கடந்த 2004ம் ஆண்டு 4 முறையும், அதேபோல் 2005ம் ஆண்டு 5 முறையும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.