ஆலங்காயம் அருகே உள்ள ஒரு ஊராட்சி துவக்கப்பள்ளியில் 18 ஆம் நூற்றாண்டு பழங்கால சதி கல் என்கின்ற உடன்கட்டை ஏறுதல் சிற்பங்கள் கண்டுபிடிப்பு
வேலூர்மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அந்த நடுக்கற்கள் 14 ஆம் நூற்றான்டு முதல் 15 ஆம் நூற்றாண்டுக்குள் செதுக்கபட்ட கற் சிற்பங்கள் என்று கூறபடுகிறது.நிம்மியம்பட்டு கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள திட்டை வடிவிலான நடுக்கற்களின் சிற்ப வடிவத்தில் தலை அலங்காரம் மற்றும் முடி அலங்காரம் ஆகியவற்றை பார்க்கும் போது அவை சோழர்கள் கால சிற்பமாக தெரிகிறது.கடந்த காலங்களில் விஜயநகர பேரரசு தமிழகத்தில் ஆட்சி செய்த போது நாயக்கர் மன்னர் காலத்தில் இருந்த ஒரு பண்பாட்டை குறிக்கும் விதமாக இந்த கற்சிற்பங்கள் நடுக்கற்கள் என்று சொன்னாலும் தன்னுடைய கனவன் போர் புரிந்தோ அல்லது எதிரிகளோடு போராடியோ மக்களை காக்க இறந்தாலோ அந்த வீரனின் மனைவி உடனடியாக தீயில் இறங்கி தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டால் சதி என்கின்ற உடன்கட்டை ஏறுதல் என்பார்கள். நாம் பார்க்கின்ற இந்த நடுக்கற்களில் அந்த புடைப்பு சிற்பங்கள் மட்டுமே காணப்படுகிறது.அந்த சிற்பத்தில் தலைவனுக்கு அருகில் இரண்டு பெண்களின் உருவங்கள் காணப்படுவதையும், அவர்கள் கைகளில் உடன்கட்டை ஏறுவதற்கான குறியிடுகள் காணப்படுவதை பார்க்கும் போது சதி கல் என்று கூறப்படுகிறது.மேலும் இரு பெண்கள் இருப்பதை பார்த்தால் அந்த தலைவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.மற்றொரு நடுக்கல்லில் ஆஜானா பாகுவான ஒரு உடலமைப்போடு ஓரு ஆண் உருவம் காணப்படுகிறது.அவர் பக்கத்திலும் ஒரு பெண்ணின் உருவம் இருக்கிறது. அதுவும் சதி கல் கணவன் இறந்த பின்னர் தன்னுடைய மனைவி உடன்கட்டை ஏறியதன் நினைவாக வைக்கப்பட்ட கற்கள் தான் இந்த நடுக்கற்கள் என்று கூறப்படுகிறது
Des: The discovery of the intricate carvings of the 18th century old conspiracy stone in a local school at Alangayam