பாபர் மசூதி இடிப்பு வழக்கை அவசர கதியில் நடத்தி முடிக்க துடிக்கும் பாஜகவின் சதி வலையில் சிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தை மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் உள்ளிட்டோர் எச்சரித்துள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது முஸ்லிம் அமைப்புகள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், துஷ்யந்த் தவே, ராஜீவ் தவாண் ஆகியோர் ஆஜராகினர்.
இந்த விசாரணையில் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டிய மூத்த வழக்கறிஞர்கள், இவ்வழக்குக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் விசாரணையை விரைவாக நடத்த வேண்டும் என முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவரது சதிவலையில் நீதிமன்றம் சிக்கிவிடக் கூடாது என ஒருசேர வலியுறுத்தினர்.