காஞ்சிபுரம் உத்திரமேரூர் ஒரு சிறப்பு பார்வை- வீடியோ

Oneindia Tamil 2018-07-05

Views 1

காஞ்சிபுரம் மாவட்ட உத்திரமேரூர் ஒருவரலாற்று சிறப்புமிக்க இடம், குடஓலை தேர்தல் முறையை இந்த உலகிற்கு அறிமுகம் செய்துவைத்த இடம் என்பது அனைவரும் அறிந்ததே.

அப்படிப்பட்ட ஊரில் பல வரலாற்று சின்னங்கள் அழிந்துவிட்டாலும் ஒருசிலவற்றை தொல்பொருள் ஆராய்ச்சித்துறை பாதுகாத்துவருகிறது. உத்திரமேரூரில் அமைத்துள்ள காவல்நிலையமும் ஒரு வரலாற்று சின்னம்தான் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதாவது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்றும் இந்தக்காவல் நிலையத்தில் இருக்கும் சிறை கதவுகள் கொல்லர்களால் அடித்து செய்யப்பட்டது என்றும் அதேபோல கட்டிடத்தின் அமைப்புகளும் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது என்றும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்தக்கட்டிடம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படும்நிலையில் மேற்க்கூரைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதாகவும் அவ்வப்போது மேலிருந்து ஓடுகளும், மரக்கட்டைகளை பெயர்ந்து விழுவதாகவும். மழைக்காலங்களில் காவல்நிலையத்தில் உள்ளே குடைபிடித்துக்கொண்டுதான் பணியாற்றும் நிலை உள்ளத்தக்கவும் புலம்புகின்றனர் காவலர்கள். இதுபோன்று சில மாதங்களுக்கு முன்பு ஒரு காவலர் மீது ஓடுவிழுந்து காயம் ஏற்பட்டதாகவும் அதிஷ்டாவசமாக மற்றொருவர் தப்பியதாகவும் கூறப்படுகிறது,

நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் காவல்நிலையம் உள்ளே ஒழுகியதில் கணினி, பிரிண்டர், ஜெராஸ் மிசின் மாற்று அரசு ஆவணங்கள், கோப்புகள் நனைந்து போனதாக கூறப்படுகிறது.

எப்போது இந்தக்கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் காவலர்கள் பார்ப்பதற்கே அஞ்சுவதாகவும் . மொத்தத்தில் காவல்நிலையம் உள்ளே தலைக்கவசம் அணிந்தே பணிசெய்யும்நிலை உள்ளதாகவும். காவலர்களுக்கு மட்டும்மல்ல காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கும், விசாரணை கைதிகளுக்கும் ஏன் ஆய்வுப்பணி மேற்கொள்ளவரும் உயர் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலையில் இந்த காவல்நிலையம் உள்ளது என்று பொதுமக்கள்.

ஊரையும் ஊர்மக்களையும் பாதுகாக்க அள்ளும், பகலும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடும் உத்திரமேரூர் காவல்நிலைய காவலர்கள் காலை பணிக்குவந்து மாலை விடுதிருப்புவது நிச்சயம் இல்லாத சூழல் இருப்பதால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த காவல்நிலையத்தை புதுப்பித்து காவலர்களையும், காவல்நிலையத்தையும் பாதுகாட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

des: Kanchipuram district Uthirameroor is a place where one of the places where the Kudalai election system was introduced to the world.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS