ஆர்.கே நகர் தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவம் களமிறக்கப்ட்டு இருக்கிறது. இதற்காக இரண்டு துணை ராணுவ கம்பெனிகள் படைகள் இன்று அதிகாலை ஆர்.கே நகர் தொகுதிக்கு வந்தடைந்தது.
சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது அங்கு மிகவும் தீவிரமான தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆர்.கே நகர் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பறக்கும் படையை சேர்ந்த சிறப்பு அதிகாரிகளும், தமிழக போலீசும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து இரண்டு கம்பெனி துணை ராணுவப்படையினர் இன்று அதிகாலை ஆர்.கே நகர் தொகுதிக்கு வந்தடைந்தனர். மொத்தம் 276 வீரர்கள் தற்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.