வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த 2 வயது குழந்தை- வீடியோ

Oneindia Tamil 2018-06-13

Views 771

பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய முதல் குழந்தையை வேனில் இருந்து அழைத்து வர சென்ற போது தம்பதியின் இரண்டாவது மகள் வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்வம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(36).சென்னையில் மாநகர அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது 4 வயது மகனான அகிலேஷ் அதே பகுதியில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் இந்த வருடம் எல்.கே.ஜி வகுப்பில் சேர்ந்து பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியை முடித்துவிட்டு வேனில் அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது அகிலேஷை வீட்டிற்கு அழைத்து செல்ல அவரது தாய் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக அவரது 2 வயது மகன் சைலேஷ் வெளியே தவழ்ந்து வெளியே வந்த்துடன் நின்று கொண்டிருந்த வேனின் முன்பகுதி சக்கரங்களுக்கு இடையில் இருந்துள்ளான். இதனை கவனிக்காத வேன் ஓட்டுநர் அகிலேஷ் இறங்கியதும் வேனை எடுத்த போது முன்பக்க சக்கரத்தில் சிக்கிய சைலேஷ் அவரது தாயின் கண்முன்பே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS