சென்னை அருகே குழந்தை கடத்த வந்ததாகக் கூறி மனநோயாளி கொல்லப்பட்ட சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, பழவேற்காடு பகுதியில் குழந்தைகளைக் கடத்த வந்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க நபரை அப்பகுதியினர் பிடித்து அடித்து கொலை செய்ததோடு, உப்புநீர் ஏரியின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலத்தின் மேல் கயிற்றால், சடலத்தைக் கட்டி கொடூரமாகத் தொங்கவிட்டனர். இதனிடையே, மனநோயாளி கொலை வழக்கில் சென்னை லைட்அவுஸ், செம்பாசிபள்ளி குப்பம், அரங்கம் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 10 மீனவர்களை காவல்துறை கைது செய்துள்ளனர். இவர்கள்தான், மனநோயாளியை மூர்க்கத்தனமாகத் தாக்கி கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
10 persons were arrested in the murder of a mentally ill person near Chennai