சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் மாணிக்கம் நகரை சேர்ந்தவர் மூதாட்டி உஷா (67) வீட்டின் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது . பின்னால் நடந்து வந்த மர்ம நபர் ஒருவன் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த நான்கு சவரன் தங்க சங்கலியை பறிக்க மூதாட்டி என்று கூட பாராமல் சிறிது தூரம் தரதரவென இழுத்து சென்றே நகை பறித்துவிட்டு தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளான். இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிறு காயங்களுடன் மூதாட்டியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சேலையூர் போலிசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.