தென் சென்னையில் செயின் பறிப்பு நடப்பது டாப்... லிஸ்ட் வெளியிட்ட போலீஸ்- வீடியோ

Oneindia Tamil 2017-12-07

Views 3

தென் சென்னை பகுதியில் அதிகளவிலான செயின் பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதியில் 99 நகை பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜெயலலிதா கடந்த 2011 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற உடன், நகைப்பறிப்பு கொள்ளையர்கள் ஆந்திராவிற்கு தப்பி ஓடிவிட்டனர் என்று கூறினார். சட்டசபையில் அதற்கு மேஜையை தட்டி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆரவாரம் செய்தனர். ஆனால் நகைப் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகின. ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் ஒபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி காலத்தில் சென்னையில் கடந்த 11 மாதங்களில் 570 பேரிடம் தங்க நகைகள் பறிக்கப்பட்டிருப்பதாக புகார்கள் வந்துள்ளன.

தென் சென்னை பகுதியில் அதிகளவிலான செயின் பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதியில் 99 நகை பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக அண்ணாநகரில் 73 வழக்குகள், அம்பத்தூரில் 72 நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன
மாதவரத்தில் 54, புளியந்தோப்பில் 53, தியாகராய நகரில் 52, அடையாறில் 48, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூரில் தலா 36 நகை பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS